அண்மைச் செய்திகள்:
Initializing...

 

அடுத்த கிரிவலம் - 27 ஜூலை 2018 மேலும் படிக்க...

 

 

அரிய வகை புகைப்படங்கள் மேலும் படிக்க...
கார்த்திகை தீபம் 2 டிசம்பர் 2017

 


திருவண்ணாமலை என்றால் அனைவருக்கும் மனதில் தோன்றுவது கண்கொள்ளா தீபத்தின் காட்சியே. ஆம் திருவண்ணாமலை தீபம் சிவனடியாரின் மற்றுமொரு பிரதிபலிப்பு என்பது இவ்வுலகம் அறிந்த உண்மை என்பதில் ஐயமில்லை. அருணாச்சலேஸ்வரர் என்கிற சிவன் அண்ணாமலை என்ற பெயர்  கொண்ட மலை அடிவாரத்தில் அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் இந்தியாவிலேயே சிவனுக்காக கி.பி 750 ம் ஆண்டு கட்டப்பட்ட மிக பெரிய கோயிலாகும்.

 

இந்த திருவண்ணாமலை என்ற புனித ஸ்தலம் சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. வேலூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது.இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம் பதிமூன்று அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சிவன் பார்வதி கோயிலாகும். இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதி அபிட்டகுச்சாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர். அண்ணாமலை என்ற பெயர் பெற்ற மலையின் அடிவாரத்தில் சிவன் காட்சி தருவதால் அண்ணாமலையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இத்திருத்தலத்தில் பல சக்தி வாய்ந்த ரிஷிகளும், கவிகளும் அண்ணாமலையாரை போற்றி பல பாடல்களை இயற்றியுள்ளனர். ரிஷிகளின் வரிசையில் முன்னோடியாக திகழ்ந்தவர் முனிவர் ரமண மகரிஷி. இவர் இங்கு சுமார் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து 1950 ம் ஆண்டு சிவனடியார் பாதம் அடைந்தார். இந்த மகரிஷியின் ஆசிரமம் அண்ணாமலை கோயிலின் மேற்கு புறத்தில் மிக சிறப்பாக அமைந்து அவரின் சீடர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

 

திருவண்ணமலை கோயிலின் சுற்றுபுறம் பல சித்த ஆராய்ச்சி கூடங்களும், தியான மையங்களும் இயங்கி கொண்டு இருக்கிறது. இங்கு மலை மேல் கிடைக்கும் அறிய தாவரங்கள் இதற்கு முக்கிய காரணம். இவை யாவும் இங்கு வரும் பக்தர்களுக்கும், இதர நோயாளிகளுக்கும் சித்த யோகிகளால் வைத்தியம் செய்யப்பட்டு பிணை தீர்க்கும் ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மனதிற்கு நிம்மதியும் உடலுக்கு வலிமையும் அண்ணாமலையாரின் கருணையால் பெற்றுசெல்கிறார்கள். இந்த ஸ்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் அண்ணாமலை என்ற பெயர் கொண்ட மலையை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதையாகும். இந்த நடைபாதையில் பக்தர்கள் ஓவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று மலையை சுற்றி வந்து பிரார்த்தனையை செலுத்துவார்கள். இதற்கு கிரிவலம் என்று அழைக்கப்படுவதுண்டு. இந்த பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பக்தர்கள் பல லட்ச கணக்கில் இங்கு ஓவ்வொரு மாத பௌர்ணமி அன்று கூட்டமாக கிரிவலம் செல்வது பல ஆண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது. இந்நாள் தவிர ஆண்டுக்கு ஒருமுறை வரும் திருவண்ணாமலை தீபத்திருநாள் அன்றும் கிரிவலம் வந்தால் அண்ணாமலையாரின் முழு கருணையையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.     

மங்கல நாட்களில் மாவிலைத் தோரணம்

வீட்டிலும்,கோவில்களிலும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவதைப்

பார்த்திருப்பீர்கள்.திருவிழாக்காலங்கள்,திருமணவீடுகளில் எல்லாம் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக அமைந்துள்ளது.இதற்கான காரணம் என்னவென்றால் மாவிளைக்காம்பிலுள்ள பால்,காற்றில் கலந்து மக்கள் சுவாசிக்கும் பொழுது ஒரு கிருமினாசினியாகப் பயன்படுகிறது.ஒருவரிடம் உள்ள நோய்க்கிருமி மற்றறோருவரைத் தொற்றிக் கொள்ளாமலிருக்கவும் பயன்படுகிறது.இதனால் தான் ஹோமக்கலசங்களில் கூட மாவிலைக்கு மத்தியில் தேங்காயை வைக்கிறார்கள்.ஆகவே மங்கல நாட்களில் மாவிலைத்தோரணம் கட்டுவது சிறப்பானதாகும்.


வாசகர் பகுதி
அடி முடியே இல்லா மலை
அருள் என்றும் வற்றா மலை
திருவிழா் - 2017