சாத்தனூர் டேம்

இந்த டேம் செங்கம் மாவட்டத்தில் சென்னகேசவ மலையருகில் 1958ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து திருவண்ணாமலை செல்ல விரும்புவோர் காரில் சுமார் 30 நிமிடம் பயணம் செய்தால் போதுமானது. சென்னிகேசவ மலையில் உருவாகும் பெண்னையார் நதி நீரை தடுப்பதற்க்காக கட்டப்பட்டது தான் இந்த சாத்தனூர் டேம். ஏராளமான விவசாய நிலங்கள் இந்த டேமினால் வரம் நீரால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 8000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது. இந்த டேமின் முழு நீர் கொள்ளளவு 119 அடியிலிருந்தால் சுமார் 7321 கன அடி தண்ணீரை தேக்க முடியும். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களை தவிர மற்ற நகரங்களிலிருந்தும் பல உலக நாடுகளிலிருந்தும் இந்த அழகிய அமைப்புள்ள சாத்தனூர் டேமிற்கு வந்து கண்டு மகிழ்கின்றனர். இது ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக மக்களிடையே விளங்குகிறது. மேலும் இங்குள்ள மழலையர்கள் பூங்கா, பூக்கள் குலுங்கும் நந்தவனம், மிருககாட்சி சாலை மக்களை கவர்ந்துள்ளது.