செஞ்சி கோட்டை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் அனேக பக்தர்கள் செஞ்சி கோட்டைக்கு செல்ல தவறுவதில்லை. சோழ மன்னர்களால் மிக அழகாக கட்டப்பட்ட செஞ்சி கோட்டை 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இதன் பரப்பளவு சுமார் 3கி.மீ. ஓர் மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு மிகவும் பிரம்மாண்டமாகவும் ஆச்சரியத்திற்குரிய முறையிலும் நிறுவப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து கிழக்கே சுமார் 37 கி.மீ பயணம் செய்தால் இவ்வழகிய செஞ்சி கோட்டையை அடையலாம். இச்செஞ்சி கோட்டை பல மன்னர்கள் கையில் பல்வேறு காலகட்டத்தில் இருந்தது. ஆதலால் இக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். குறிப்பாக விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர் இங்கு ஆட்சி செய்தார். அதன் பின்பு மராத்திய மன்னர்கள் கையில் செஞ்சிக்கோட்டை சில காலம் இருந்தது. அதற்கு பிறகு மொகலாயர்களிடம் சென்றது. சில காலம் பிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இதை கைப்பற்றினர். அதன் பின் ஆங்கிலேயர்கள் இதை ஆட்சி செய்தனர். ஆக செஞ்சி கோட்டை ஓர் வரலாற்று பிரசித்தி பெற்ற ஓர் முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது.