திருவண்ணாமலை செல்வது எப்படி

சிவனடியாரின் முக்கிய ஸ்தலமான திருவண்ணாமலைக்கு செல்ல நல்ல சாலை வசதி , ரயில் வசதி, மற்றும் வானம் மூலமும் செல்லும் வசதி ஏராளமாக உள்ளது. ஆகாயம் மூலம் செல்ல வசதியுள்ளவர்கள் சென்னைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து சுமார் 185 கி.மீ சாலை மூலம் பயணம் செய்தால் திருவண்ணாமலை சென்றடையலாம். இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் வாழும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களுரு, மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு விரைவில் வந்து செல்லலாம்.அயல் நாடுகளில் வாழும் பக்தர்களுக்கும் இதுவே சரியான தேர்வாகும்.

சாலை பயணம் சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்ல சுமார் 3.5 மணி நேரம் கார் மற்றும் பொது துறை போக்குவரத்து மூலமும் பயணம் சௌகரியமாக இருக்கும். டாக்ஸி மூலம் செல்ல வாடகை சுமார் ரூபாய் 2500 செலவாகும். அரசு போக்குவரத்து பேருந்துகளில் செல்ல ஏராளமான வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருப்பதி, சேலம், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இதர சிறிய நகரங்களிலிருந்தும் செல்ல வசதியுள்ளது.

ரயில் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள் திருவண்ணாமலைக்கு காட்பாடியிலிருந்தும் அல்லது சென்னையிலிருந்து விழுப்புரம் மார்கமாகவும் செல்லலாம்.

பெங்களுரிலிருந்து ஏராளமான அரசு போக்குவரத்துக் கழகம் பஸ்களை இயக்குகிறது. இரவில் பஸ் பயணம் இதமாக உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பயணம் செய்பவர்கள் நேர் தென் நோக்கி பயணம் செய்தால் திருவண்ணாமலை சென்றடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை சரியாக நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. திருவண்ணாமலை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இரண்டுக்கும் அருகே அண்ணாமலையார் கோயில் நடக்கும் தூரத்தில் உள்ளது.