சேஷாத்ரி மகரிஷி ஆசிரமம் :

சேஷாதிரி ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் 1870ம் ஆண்டு பிறந்தார். இவர் தன் சிறு வயதிலேயே திருவண்ணாமலை சென்றடைந்தார். ரமண மகரிஷியை போல் இல்லாமல் இவர் சக்தி தேவியின் தீவிர பக்தர். வேறு பட்ட கடவுள்களின் பக்தர்களாக இருந்த போதிலும் இவர்கள் இரண்டு பேரும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர். சேஷாதிரி ஸ்வாமிகள் மிகவும் மாறுபட்ட மனிதராக அவர்களுடைய பக்தர்களுக்கு காணப்பட்டார். அவர் தனக்கென்று ஒரு வீடு வைத்துக்கொள்ளாமல் நினைத்த இடத்தில உட்காருவதும் படுப்பதும் என்று இருந்தார். எப்பொழுதும் திருவண்ணாமலை தெருக்களில் கண்ட நேரங்களில் சுற்றி திரிந்தார். உட்கார்ந்த இடத்தில தூங்குவதும் ரோட்டோர கடைகளில் சாப்பிடுவதும் என வாழ்க்கையில் ஓர் ஒழுக்கமில்லாமல் காலத்தை கழித்தார். சேஷாதிரி ஸ்வாமிகள் உணவருந்தும் விடுதிகளுக்கு காசு கொடுப்பதில்லை. இருந்தும் கடை வைத்திருப்பவர்கள் ஸ்வாமிகள் வந்து உணவு உட்கொண்டால் அது அவர்களுக்கு நல்ல சகுனம் என சந்தோஷப்படுவார்கள். அன்றைய தினம் இக்கடைகளில் நன்கு வியாபாரம் நடை பெறுவது வழக்கம்.சேஷாதிரி ஸ்வாமிகள் பல நாட்கள் தொடர்ந்து குளிப்பதில்லை. ஆனால் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி பல மணி நேரம் நின்றுகொண்டு அல்லது நடனமாடிக்கொண்டும் பாட்டுப்பாடிக்கொண்டும் பக்தர்களை உற்சாகப்படுத்துவார். இவர் சித்தர்கள் போல வாழ்ந்து அவ்வப்போது பக்தர்களுக்கு தெய்வவாக்கு கூறுவார். அவரை நாடி வரும் பக்தர்களுக்கு சில சமயங்களில் அருள் கூறாமல் ஓடி விடுவார். பக்தர்கள் அவருடைய கால்களில் விழுந்து வணங்குவதும் தொடுவதும் அவருக்கு அறவே பிடிக்காத செயல் ஆகும். இதனால் அவரை நாடி வரும் பக்தர்களை அவ்வப்போது திட்டி உதாசீனப்படுத்துவார். சில சமயங்களில் கல்லால் அடிப்பார். பெரும்பாலும் தனியே உட்கார்ந்து தனக்கு தானே பேசி கொள்வார். சில சமயங்களில் நோய்வாய்பட்டு இருப்பவர்களை தொட்டு அவர்கள் குணமடைய செய்வார். இவர் சக்தி கடவுளின் தீவிர பக்தராக இருப்பதனால் சக்தியின் மகிமையை பெற்றிருக்கிறார் என பக்தர்களிடையே நிலவும் எண்ணமாகும். மேலும் இதை தவிர அருணாச்சலேஸ்வரர் மற்றும் ராமபிரானுடைய அனுகிரகம் உள்ளது என நம்பப்படுகிறது. சேஷாதிரி ஸ்வாமிகள் காமாட்சியின் அருளால் அவர்கள் தாய் தந்தைக்கு நீண்ட நாட்கள் தவமிருந்து பிறந்தார் என புராணம் கூறுகிறது.

ஆதலால் தான் இவருக்கு காமாட்சியின் அருள் இருக்கிறது என பக்தர்கள் பலரும் நம்புகிறார்கள். சேஷாதிரி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வரதராஜன். தாய் பெயர் மரகதம். இவர்கள் காமாட்சிதேவிக்கு தீவிர தவம் இருந்து சேஷாதிரி ஸ்வாமிகள் பிறந்தார் என நம்பப்படுகிறது.சேஷாதிரி ஸ்வாமிகள் ஒரு தெய்வ கடவுள் என அனைவரும் எண்ணினர். அதற்கேற்றார்போல குழந்தை பருவத்திலிருந்தே அதிகாலையில் சேஷாதிரி எழுந்து தீவிர பூஜைகளில் ஈடுபடுவார். சேஷாதிரி சிறு பாலகனாக இருந்த போது அவர் தாயாருடன் காஞ்சிபுரம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அங்குள்ள கடையில் விற்பதற்காக வைத்திருந்த கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக்கொண்டான். அவனுடைய அம்மா காசு இல்லாததால் அப்பொம்மையை திருப்பி கொடுக்க சொன்னால். அவன் திருப்பிகொடுக்க மறுப்பதை பார்த்த கடைக்காரர் இவன் மேல் பரிதாபம் மற்றும் ஆச்சரியம் அடைந்தனர். காசு வாங்காமலேயே அந்த பொம்மையை சேஷாதிரிக்காக இலவசமாக கொடுத்துவிட்டார். கடைக்காரர் இவன் ஒரு தெய்வ பிறவியாக இருக்கலாம் என்று எண்ணினான். அதற்கேற்றபடி அன்று அவர் கடையில் இருந்த அனைத்து பொம்மைகளும் விற்றுவிட்டன. இந்த சிறுவனின் மகிமையை அனைவரிடத்திலும் கூறி பூரித்துப்போனார். அன்று முதல் அந்த சிறுவனின் புகழ் திருவண்ணாமலையில் உள்ள அனைவரிடையே பரவ தொடங்கியது. அவன் ஒரு தெய்வ பிறவி என்று நம்பினர்.

சேஷாதிரி தனது ஐந்தாவது வயதில் வேத பாடசாலைக்கு பெற்றோர்களால் அனுப்பப்பட்டார். அங்கு அவன் வேதம் மற்றும் மந்திரங்கள் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினான். அவர் பதினான்காம் வயதை தாண்டும் முன்னே வேதங்கள் பற்றி நன்றாகவே கற்றுக்கொண்டார். அவர் பதினான்காம் வயதில் அவனுடைய தந்தை இறந்தார். அதன் பின் சேஷாதிரி அவனுடைய மாமாவின் ஊருக்கு சென்றார். இங்கு அவர் உபநிஷம், வேதம், கிதா, வியக்ரமா, நியாய, ஜோதிடம், மற்றும் இசை பயின்று தேர்ச்சி பெற்றான். சேஷாதிரி தன் பதினேழாம் வயதில் தன் தாயை இழந்து அதன் பின் அவருடைய மாமாவிடம் முழுமையாக அவரின் அரவனைப்பில் வாழ தொடங்கினான். சேஷாதிரி அழ்ந்த தியானம் செய்ய தொடங்கி அவர் சக்தி, அருணாச்சலேஸ்வரர் மற்றும் ராமாவின் படங்களை முன் வைத்து நீண்ட நேரம் தவம் இருந்தார். பின்பு சேஷாதிரி அவருடைய பத்தொன்பதாவது வயதில் பாலாஜி சுவாமிகளிடம் சிஷ்யனாக சேர்ந்து துறவறம் மேற்கொண்டார். பிறகு தமிழ்நாட்டில் உள்ள பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று கடைசியாக அண்ணாமலையாரின் ஸ்தலமான திருவண்ணாமலை வந்தடைந்தார்.சேஷாதிரி தியானம் மேற்கொள்ள தனக்கென்று தனியாக எந்த இடத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அங்கு, இங்கு சென்று தியானம் செய்வார். அவருக்கு மிகவும் பிடித்த இடம் கம்பாட்டு இளையனார் கோயில், த்ரௌபதி அம்மன் கோயில், யோகேஸ்வர மண்டபம், மற்றும் பாதாள லிங்கம். சேஷாதிரி ஸ்வாமிகள் ரமண மகரிஷி வரும் முன்னரே திருவண்ணாமலை வந்தடைந்தார். இவர் ரமண மகரிஷியின் அண்ணன் என்று அழைக்கப்படுவார்.மகான் சேஷாதிரி அவர்களுடைய சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு அளிக்கும் அறிவுரையில் என்றுமே சிவலிங்கத்தை பிரார்த்தனை செய்வதால் மான நிறைவும் சாந்தியும் அடைவது உறுதி என உரைத்தார். இந்த அறிவுரை மகான் சேஷாதிரியின் சிஷ்யர்கள் தவறாமல் கடைபிடித்து வாழ்கையில் வெற்றியும் சந்தோஷமும் பெற்றனர். சேஷாதிரி ஸ்வாமிகள் நாற்பது வருட காலம் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். பிறகு சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இங்கேயே இறந்தார். அவருடைய ஆசிரமம் ரமணமகரிஷியின் ஆசிரமம் அருகில் திருவண்ணாமலையில் உள்ளது