யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் :

யோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகள் அவர்கள் சிஷ்யர்களிடையே உயர்ந்த மரியாதையுடன் விளங்கினார். இவரை விசிறி சாமியார் எனவும் அழைத்தனர். யோகி ராம்சுரத்குமார் காசியில் பிறந்தவர். சில காலங்கள் அங்கு வாழ்ந்த பின் அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளை பெருக்கிகொள்ள திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தொடர்ந்து வணங்கி வந்தார்.அவர் நல்ல தெய்வ பக்தி மிகுந்த பரம்பரையை சேர்ந்தவர். அவருடைய குழந்தை பருவம் முதலே யோகிகள் மற்றும் ஆன்மீகவாதிகளை பின் தொடர்ந்து கங்கை கரையோரங்களில் அவருடைய தியானங்கள் சிறப்படைந்தன. மகான் யோகி ராம்சுரத்குமார் டிசம்பர் மாதம் முதல் தேதி 1918ம் ஆண்டு கங்கை கரையோரம் உள்ள ஓர் சிறிய கிராமத்தில் பிறந்தார்.அவர் குழந்தையாக இருந்த முதலே அவருடைய செயல்கள் பார்ப்பவர்களை ஈர்த்தது. அவரிடத்தில் தெய்வ அனுகிரகங்கள் தென்பட்டன. அவர் எப்பொழுதும் ரிஷிகள் மற்றும் யோகிகளை பின் தொடர்ந்து அவர்களுக்கு சிஷ்யனாக விருப்பப்பட்டார். கங்கை கரையில் வாழ்ந்த சாதுக்களுக்கும் இவர் நாம ஜபம் செய்து வந்தார். யோகி ராம் இந்த செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தெய்வ வழிபாடுகளில் அவரை முழுமையாக அர்பணிக்க தொடங்கிவிட்டார். சாதுகளுடன் பணிவிடை செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்று அவர்களுடைய புராண சிஷ்யனாக சேவை செய்தார். சுவாமிகள் அனைவரும் இவருடைய ஆர்வத்தை கண்டு இவரை பாராட்டி மேலும் ஆன்மீக சிந்தனைகளை புகட்டினர். ஸ்ரீ யோகி ராம் பல மகான்களை தொடரும் ஆர்வத்தில் பல இடங்களுக்கு பயணம் செய்தார். 1947 ம் ஆண்டு அவர் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு தென்னிந்தியாவை நோக்கி புறப்பட்டார்.அவர் ஸ்ரீ அரவிந்த கோஷ் சுவாமிகளை காண விரும்பி அவர் ஆசிரமம் வந்தடைந்தார்.சுவாமி அரவிந்த் கோஷியின் சிபாரிசின் அடிப்படையில் மகான் ரமண மகரிஷியை சந்திக்க திருவண்ணாமலை புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தார்.அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் பிரார்த்தனை செய்துவிட்டு ரமண மகரிஷியின் ஆசிரமம் வந்தடைந்தார். இங்கு ரமண மகரிஷியின் ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தார்.

ரமண சுவாமிகள் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு சக்தியை வழங்கினார். இதன் பின் ரமணாவின் அறிவுரைப்படி யோகிராம் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமதாஸ் சுவாமிகளை காண கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு ராம்தாஸ் ஸ்வாமிகள் ஆசிரமத்தில் அவருடைய சிஷ்யனாக சேவை செய்தார். இங்கு தீவிர ஆன்மீகம் மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்ட யோகி ராம் சுரத்திற்கு ராம்தாஸ் ஸ்வாமிகள் பக்தி வழங்கினார். மேலும் யோகிராம் காதுகளில் ராம்தாஸ் ஸ்வாமிகள் தெய்வ மந்திரமான ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என உச்சரித்தார். அதன் பின் மகான் யோகி ராம் ( விசிறி சாமியார் ) அவருடைய புனித யாத்திரையை தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல முற்பட்டார். இறுதியில் ஸ்வாமிகள் திருவண்ணாமலை கோயில் அருணாச்சலேஸ்வரர் சன்னதி வந்தடைந்தார். இவர் இங்குள்ள முக்கிய ஸ்தலங்களில் தியானம் செய்தார். அதில் அவருக்கு மிகவும் பிடித்த இடம் கோயில் தேர் அருகில் மற்றும் கோயில் சுற்றியுள்ள பிரகாரங்கள்.பின்பு அவர் கோயில் சன்னதி வீதியில் ஓர் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வாழ்ந்து வந்தார். இங்கு அவர் ஆசிகளை பெற தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவர் ஆசியை பெற்று சென்றனர். இங்கு வரும் அவருடைய பக்தர்கள் அவரை பெரிய இடத்தில் ஆசிரமம் அமைக்க உதவி செய்து அக்ரஹார சேலை என்னும் இடத்தில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் ஓர் ஆசிரமத்தை நிறுவினர். இங்கு அவர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வந்தார். ஸ்வாமிகள் இறுதியில் 2001ம் ஆண்டு வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். இவர் மறைவிற்கு அனுதாபம் செலுத்த பல்லாயிரம் சிஷ்யர்கள் திருவண்ணாமலை நோக்கி வந்து விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகிராம் சுவாமிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.