அருணாச்சலேஸ்வரர் கோயில்

arunachaleswarar templeஅண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். தென் இந்தியாவை ஆண்ட பல மன்னர்களில் குறிப்பாக பாண்டிய மன்னர், சோழ மன்னர், மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இக்கோயிலின் வளர்ச்சிக்காக பல வழிகளில் உதவிபுரிந்துள்ளனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதிதேவி. இங்கு சிவன் உலகை உருவாக்கிய பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது. இக்கோயிலை பற்றி பல விபரங்கள் தமிழ் புராண புத்தகங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலின் மகிமையை போற்றி தமிழ் கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ளனர்.திருவண்ணாமலை மேலும் ஒரு சிறந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில் ஆண்ட பல மன்னர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சிக்கும் வசதியடையவும் மிகுந்த பொருளுதவி, பராமரிப்பு ஆகியவை அளித்து இக்கோயில் பிரபலமடைய செய்துள்ளனர். பல பக்தர்களும் பொதுமக்களும் திருவண்ணாமலை வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்துள்ளனர். இக்காரணத்தால் கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக இக்கோயிலின் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாக விளங்குகிறது. கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் உள்ளது. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் உள்ளது. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசாலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.

tiruvannamalai arunachaleswarar templeஇங்கு அக்னி வடிவத்தில் உள்ள சிவன் வழிபாடு ஓவ்வொரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது பல்லாண்டு காலமாக நடந்து வரும் பழக்கமாகும். இந்நாள் மிக விசேஷமான நாளாக ‘கார்த்திகை தீபத்திருநாள்’ என்று அழைக்கப்படுகிறது. இதை காண உலகமெங்கும் உள்ள சிவனடியார் பக்தர்கள் இங்கு கூடி தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமான காரியம் என்பது மக்களிடையே நிலவும் ஆழ்ந்த நம்பிக்கை.இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதிதேவி அபிட்டகுசலாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர். இக்கோயில் சிவனுடைய சிறப்பான கோயில் என விளங்குவதற்கு காரணம் இங்கு சிவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் காட்சி தருவதால் சிறப்புபெற்றது. மற்ற நான்கு பூதங்களான ஆகாயம், நீர், வாயு, மற்றும் நிலம் சேர்ந்து அமைந்தது தான் இவ்வுலகம். இந்த நான்கு பூதங்களும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வெவேறு கோயில்களில் சிவனை பிரதிபலிகின்றன. சிவன் திருவானைகாவலில் நீர் வடிவத்திலும் சிதம்பரத்தில் ஆகாய வடிவத்திலும் காஞ்சிபுரத்தில் நிலம் வடிவத்திலும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வாயு வடிவத்திலும் காட்சியளிக்கிறார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்றும் பாரம்பரிய முறையில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைமுறையில் இருந்துவருகிறது. இங்கு வாழும் மக்கள் மற்றும் கோயிலுக்கு சம்மந்தமான பூசாரி நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், சிப்பந்திகள், காவலாளிகள், பஜனை குழுவினர், பல்லக்கு தூக்குபவர்கள், வித்வான்கள், மற்றும் இதர கைவினை கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணைத்து கோயில் வேளைகளில் ஈடுபட்டு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து சரிவர செய்து வருகின்றனர்.குறிப்பாக தெற்குப்புரத்தில் உள்ள தெப்பகுளத்தில் இருக்கும் கங்கா தீர்த்தத்தை யானையின் மீது வைத்து தெற்கு புரத்தில் திருமஞ்சன கோபுரம்வழியில் கொண்டுவந்து இந்நீரை இரண்டாவது பிரகார நுழைவாயிலை சுத்தம் செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது.பின்பு சிவன் மற்றும் பர்வதிதேவியை ஊர்வலமாக சிவனை ராஜகோபுரம் உள்ள கோயிலுக்கும் பார்வதியை உண்ணாமலையம்மன் கோயிலுக்கும் எடுத்துச்செல்கிறார்கள். அதன் பின் பூஜைகள் ஆரம்பித்து காலையில் தொடங்கி ஒரு நாள் முழுவதும் ஆறு முறை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் சிவனை சேவித்து பௌர்ணமி அன்று மாதம் ஒரு முறை கிரிவலம் வருகின்றனர். சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமி நாள் அன்று 13 கி.மீ நடந்து கிரியை சுற்றி வருவது வாழக்கமாக உள்ளது. இக்கிரிவலம் செல்பவர்கள் அனைவரும் மனதில் அமைதியுடனும், உடல் வலிமையுடனும் இருக்க உதவுகிறது.